பாம்பன் பாலம் திறப்பின் ஊடாக தலைமன்னார் ரயில் பாதைக்கான பாதை திறக்கப்பட்டதா?

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 6ஆம் திகதி தமிழகம் சென்றிருந்த பிரதமர் மோடி மற்றொரு பணியைத் தொடங்கி வைத்திருந்தார். அது பாம்பன் பாலத்தின் திறப்பு விழா.

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ரயில் பாலத்தின் கடைசிப் பகுதியாக பாம்பன் பாலம் உள்ளது. இந்தியாவின் இறுதி ரயில் நிலையம் அமைந்துள்ளது ராமேஸ்வரத்தில்தான்.

தலைமன்னாருக்கும் இந்தியாவிற்கும் இடையே ரயில் இணைப்பு இன்பது இங்கிருந்துதான் மேற்கொள்ள முடியும். ம்பன் பாலத்தின் திறப்பு விழாவுடன் இந்த நம்பிக்கை பிறந்துள்ளது.

1964 இல் ஏற்பட்ட ஒரு புயலால் பம்பன் பாலம் அழிக்கப்பட்டது. இல்லாவிட்டால் இன்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ரயில் சேவை இயங்கிக்கொண்டிருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருநாடுகளுக்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இலங்கையில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக பேச்சுவார்த்தைகள் முடங்கின.

இருப்பினும், கடந்த வாரம், இந்தியாவின் ‘தி இந்து’ செய்தித்தாள், மோடியின் இலங்கை பயணம் மற்றும் பாம்பன் பாலம் திறப்பின் பின் இந்தத் திட்டம் வெற்றியளிக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக கூறுகிறது.

மோடி இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு செல்லும் போது ராமர் பாலம் எனப்படும் மணல் திட்டுகள் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்ட படியேதான் சென்றிருந்தார். இது இந்தியாவுக்கு குறித்த பாலத்தை அமைப்பதற்கு உள்ள எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

விரைவில் இத்திட்டம் குறித்து மீள பேச்சுகள் தொடங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *