கண்டி நகரில் குவியும் பக்தர்கள் – கட்டுப்படுத்த முடியாது திணறும் அரசாங்கம்

ஸ்ரீ தலதா மாளிகையில்  புனித தந்த தாது கண்காட்சியை பார்வையிட இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

நகரத்தின் தெருக்களில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதிகள் சாலைகளில் சிதறிக்கிடக்கின்றன.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தங்களுக்கு குப்பைகளை வீச சரியான இடங்கள் இல்லை எனக் கூறுகின்றனர். சிற்றுண்டிகள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வருகின்றன.  ஆனால் கழிவுகளை அங்கேயே விட்டுவிடுகிறார்கள்.

தெருக்களில் மலம் கழித்த பொலிதீன் பைகள் மற்றும் சிறுநீர் நிரப்பப்பட்ட போத்தல்கள் சிதறிக்கிடப்பதாகவும், பாதைகளில் மலம் கழித்தல் மேற்கொள்ளப்படுவதாகவும் நகர்ப்புறவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை, புனித தந்த தாதுவை பார்வையிட வரும் யாத்ரீகர்கள் மறு அறிவித்தல் வரை கண்டி நகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகருக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அறிவித்துள்ளார்.

கண்டி நகரில் நான்கு லட்சம் பேர் ஏற்கனவே கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ள அவர், உணவு மற்றும் பானங்கள் வழங்க முடியும் என்றாலும், மக்களுக்குத் தேவையான கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதில் கடுமையான சிக்கலை எதிர்கொள்வதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகருக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *