சமரி அத்தபத்துவுக்கு ஐ.சி.சி அபராதம்

இந்தியா, இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய 3 நாடுகளின் மகளிர் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆபிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது. பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 48.2 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது

.இந்நிலையில் இத்தொடரில் ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமரி அத்தபத்துவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதமும், ஒரு கரும்புள்ளியையும் ஐ.சி.சி அபராதமாக விதித்துள்ளது. மேலும், சமரி அத்தபத்துவும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்றும் ஐ.சி.சி தெளிபடுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *