பல மாதங்களாக அமெரிக்காவில் இருந்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இலங்கைக்குத் திரும்ப உள்ளார்.
அவர் வரும் வியாழக்கிழமை நாட்டிற்கு வருவார் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், அவர் அமெரிக்காவிற்குச் சென்றிருந்த நிலையில் மீ்ண்டும் இலங்கை திரும்ப உள்ளார்.
நாடு திரும்பிய பிறகு அவர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா இல்லையா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

