உள்ளூராட்சித் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலானவை தோல்வியடைந்து வருவதாக அறிய முடிகிறது.
அந்த நிறுவனங்களின் நிர்வாக அதிகாரத்தை நிறுவுவது குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததே இதற்குக் காரணம்.
ஒன்றிணைந்து ஆட்சியமைக்க பேச்சுகள் நடைபெற்ற போதிலும் பதவிகளைப் பகிர்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இடையே இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.
உள்ளூராட்சித் நிறுவனங்களின் மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்காக கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்ற போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தெரியவருகிறது.

