கொழும்பு கடற்கரையோரமாக தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இன்று (04) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிது.

இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது.

இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.

குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொள்ளுப்பிட்டி – பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் பறந்து சென்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *