இலங்கை – இந்திய படகு சேவையை விரிவாக்க இந்தியா நிதியுதவி

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மேம்படுத்துவதற்கு 300 மில்லியன் நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதற்கும் மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

முக்கிய தளவாட மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்டுவதற்கு இந்நிதியுதவி உதவியளிக்கும் என்பதுடன், சேவையின் மலிவு மற்றும் செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து,படகு சேவையை இதுவரை 15,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களை வலுவாகியுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பை புத்துயிர் பெறுவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *