நாட்டின் அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01 மில்லியன் வாக்குகளை மாத்திரம் பெறும் என்றும், இது முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விடக் குறைவாக இருக்கும் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சரத் பொன்சேகா, SJB இன் பல மூத்த உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர், இவ் மூத்த உறுப்பினர்களின் வெளியேற்றமானது கட்சிக்குள் அதிருப்தியைக் குறிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், “முதலில், வெல்கம வெளியேறினார். பின்னர் சம்பிக, ராஜித, தலதா மற்றும் பொன்சேக் வெளியேறினர். இப்போது கட்சித் தலைவரின் ஒவ்வொரு முடிவுக்கும் தலையாட்டும் நபர்கள் மட்டுமே கட்சியில் எஞ்சியுள்ளனர்,” இதுபோன்றவர்களுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பயணத்தைத் தொடங்குவது கடினம் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

